×

வாக்கு எண்ணும் மைய பகுதிகள் ‘சிவப்பு’ மண்டலம் காவல் துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. சென்னையை பொறுத்தவரை வடசென்னை, தென் சென்னை மத்திய சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிக்களுக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி, மயிலாப்பூரில் உள்ள ராணி மேரி கல்லூரி, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 3 வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு ஷிப்டிக்கு 140 காவலர்கள் என சுழற்சி முறையில் சிசிடிவி பதிவுகளுடன் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி, 1973ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144ன் கீழ் சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி சாதனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 3 இடங்கள் ‘சிவப்பு’ மண்டலமாக அறிவிக்கப்பட்டு வரும் ஜூன் 4ம் தேதி வரை டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி சாதனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி யாரேனும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் டிரோன்கள் உள்ளிட்ட சாதனங்கள் பறக்கவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post வாக்கு எண்ணும் மைய பகுதிகள் ‘சிவப்பு’ மண்டலம் காவல் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,North Chennai ,South Chennai ,Central Chennai ,Loyola College ,Nungambakkam ,Rani ,Mylapore ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...